அருள்மிகு குழந்தை வேலாயுதன்:
குழந்தை வேலாயுதனே குருபரனே உந்தன்
கழல் பணிந்தேனே காத்தருள் சுந்தரனே
மழபாடி மாணிக்கம் மகேசன் மைந்தனே
குழலூதி மனங்கவர்ந்த கண்ணன் மருகனே
பழம் பெற வேண்டியே புவனம் வலம்வந்து
பழனிமலையில் நின்ற பாலகுமாரனே
பழமே நீயென்று பாடிய ஔவைக்கு
பழம் தந்த பாலகனே பைந்தமிழ் தந்தவனே