அருள்மிகு கூடல் குமாரர்
நீலகண்டன் மைந்தனாம் நீலி குமாரனாம்
சீலமிகு வேலனையே சிந்தனைசெய் மனமே
நீலவண்ணன் மருகனை நித்தமும் நினைத்தாலே
காலபயம் போக்கியே காலமெல்லாம் காத்திடுவான்
கோலமயில் ஏறியே
அன்பருக்கருளிடவே
ஞாலமெல்லாம் வலம்வரும் சண்முகசுந்தரனை
ஆலவாய் தனிலமர்ந்த கூடல் குமாரனை
பாலகுருநாதனை பணிந்தருள் பெறுவோமே