அருள்மிகு சக்தி வடிவேலன்:
சக்தி வடிவேலனே சண்முகனே குகனே
பக்தியுடனே உந்தன் பதமலர் பணிந்தேனே
யுக்தியும் அறிவேனே உன் திருவருள் பெறவே
முக்தி தரும் மந்திரமாம் முருகா என்று உரைப்பதுவே
கூலியாளாய் வந்த கூத்தன் மைந்தனே
மாலிருஞ்சோலை உறை மாதவன் மருகனே
வேலினாலே மலையைப் பிளந்த வீரனே
சூலினி புதல்வனே சுந்தரகுமாரனே