அருள்மிகு சிக்கல் சண்முகன்:
விந்தை பலபுரிந்து வினைகளை தீர்த்திடும்
கந்தையனே உன்னை வந்தனை செய்தனே
எந்தையும் தாயும் என்றுமே நீயென்று
சிந்தையில் வைத்துன் சீரடி பணிந்தேனே
திக்கிலா அடியவர்க்கு துணை யாகவே நிற்கும்
சிக்கல் சண்முகனே சிங்கார வேலனே
சொக்கனின் திருமகனே சுந்தர வடிவேலா
இக்கணமே வந்துநீ இன்னருள் புரிவாயே