அருள்மிகு சிக்கல் சிங்காரவேலன்
சிக்கல் சிங்காரனே சிவசக்தி வேலவனே
எக்கணமும் மறவாத ஏழை எனக்கருள்வாயே
திக்கற்ற அடியவரின் தீவினை மாய்ப்பவனே
சொக்கனின் திருமகனே சோலைமலை சுந்தரனே
சக்திவடி வேலுடனே சூரனை வதைத்தவனே
நக்கீரர் பாடிய ஆற்றுப்படை நாயகனே
பக்தருக்கருளும் பரமகுருநாதனே
குக்கிசுப்ரமணியனே குகனேவந்தருள்வாயே