முருகன்

அருள்மிகு சிங்காரவேலர், திருமயிலை:

மயிலாகவே வந்து மலைமகள் பூசித்த
மயிலையம்பதி வாழும் மயில்வாகனனே

கயிலை நாதன் கண்ணிலே தோன்றிய
சுந்தர பாலனே சிங்காரவேலனே

ஆனைக்கருள்செய்த அனந்தன் மருகனே
ஆனைத்தோலணிந்த அரனின் மைந்தனே
ஆனை வளர்த்த அணங்கின் மணாளனே
ஆனைமுகன் அருளாலே மானை மணந்தவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.