அருள்மிகு சிறுவாபுரி முருகன்:
குறமகள் கொஞ்சிடும் குமரனே முருகா
கெஞ்சி உனை அழைத்தும் கேளாதிருப்பதென்ன
மறவாமல் உன்னை மனதால் நினைத்தேனே
மால்மருகா குஹா மனம் இரங்காயோ
வறுமை நீங்கியே வளமுடன் வாழவும்
உறுபிணி இலாத உடல்நலம் பேணவும்
அறுபடை முருகா உன் ஆறெழுத்தோதினேன்
சிறுவாபுரி முருகா சுந்தரனே அருள்வாய்