அருள்மிகு சிவகுருநாதன்
தினம் நீ நினைப்பாயே மனமே
தீனதயாளனாம் சிவகுருநாதனை
கனலாய் வந்து புனலில் மலர்ந்த
கங்கையின் மைந்தனாம் கார்த்திகேயனை
கந்தனவன் அருளாலே சந்ததிகள் வளருமே
வேலனவன் பார்வையிலே வினையெல்லாம் விலகுமே
ஞானமதை தந்திடும் ஞானசுந்தரனவன்
செல்வமெல்லாம் தரும் செல்வமுத்துக்குமரனவன்