அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருப்பரங்குன்றம்
திருப்பரங்கிரி அமர்ந்த வேல்முருகா
தீராத வினை தீர்க்கும் மால்மருகா
அருணகிரி போற்றும் அருமருந்தே
திருப்புகழே எனக்கு இனி விருந்தே
தேவர்களை காத்தவனே தேவானை நாயகனே
சேவற்கொடியோனே செந்தமிழ்ச் செல்வனே
சுடர் மிகு சுந்தரனே சுப்பிரமணியனே
இடர்களை நீக்கியே இன்னருள் புரிவாயே