அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, திருப்பரங்குன்றம்:
சரவணபவனே சண்முகசுந்தரனே
வரமருள்வாயே வீரவிசாகனே
அரவணிந்தாடும் அரனின் திருமகனே
அரவுமீதாடிய அரியின் மருமகனே
மரமாகி நின்ற சூரனைப் பிளந்து
சுரபதி மகளின் கரந்தனை பிடித்த
பரங்கிரி அமர்ந்த பார்வதி மைந்தனே
பரவசமுடனே பாடிஉனைப் பணிந்தேனே