அருள்மிகு செங்கதிர் வேலன்:
செய்வதொன்று அறிவேனே செங்கதிர் வேலனே
மெய்யன்புடனே உன் மலரடி தொழுவதே
உய்வதற்கு உனையன்றி உறுதுணை எவரைய்யா
ஐயமும் ஏதைய்யா ஆறுமுக வேலைய்யா
பால் வண்ணன் பாலனே பன்னிரு கையோனே
மாலவன் மருகனே மந்திரப் பொருளோனே
வேலுடன் மயிலேறி வலம்வந்த சுந்தரனே
கோலுடன் மலையேறி காட்சிதரும் கந்தனே