அருள்மிகு செங்கோட்டு வேலன்:
மங்கையொரு பாகனுடன் மலைமீதமர்ந்த
சங்கரன் மைந்தனே செங்கோட்டு வேலவனே
மங்கை உறை மார்பன் மருகனே குகனே
சங்கத்தமிழ் தந்த சண்முகசுந்தரனே
விந்தை பலபுரிந்து வீணரை வீழ்த்தியே
சிந்தை கவர்ந்தவனே சிங்கார வேலனே
எந்தையும் தாயுமாய் எனைக் காத்தருளும்
கந்தையனே கடம்பா கார்த்திகை பாலனே