அருள்மிகு செந்திலாண்டவர்
குகா குகா என்று கூவி அழைத்தாலே
சகாயம் செய்வானே சண்முகசுந்தரனே
மகாதேவன் மகன் செந்திலாண்டவனை
மனம் உருகி பாடவே மகிழ்ந்தருள் புரிவானே
வங்க கடலாடி நாழியில் நீராடி
சங்கரர் அருளிய புஜங்கமும் பாடி
ஜெயபேரிகையுடன் சூரனை வென்றுவரும்
ஜெயந்தி நாதரை கண்டருள் பெறுவோமே