அருள்மிகு செந்திலாண்டவர்:
சந்தமும் வேண்டுமோ சாகித்யம் வேண்டுமோ
கந்தனருள் பெறவே கடுந்தவம் வேண்டுமோ
சுந்தரன் மைந்தனை சிந்தையிலே வைத்து
எந்தாய் என்றாலே தந்தேன் என்பானே
தந்தைக்கு குருவான தனயனை நினைத்தாலே
விந்தைகள் புரிந்து வளம்பெறச் செய்வானே
செந்தமிழ் கடவுளாம் செந்திலாண்டவனை
வந்தனை செய்தாலே வழி பிறந்திடுமே