அருள்மிகு செந்தூர் முருகன்:
அலைவாயுகந்த ஆறுமுகவேலவனை
தலைமுறை தோறுமே தாள் பணிவோமே
அலைமகள் உடனுறை அரங்கனின் மருகனாம்
கலைப்பிறை சூடிய சுந்தரன் மைந்தனாம்
அலைகடலாடியே ஆலயம் வலம்வந்து
மலைமகள் மைந்தனை மனமுருகித் தொழுது
இலை நீறணிந்தாலே இனிதே நீங்கிடுமே
தலைமுதல் கால்வரை தாக்கிடும் பிணிகளுமே