அருள்மிகு ஞானவேல் முருகன்:
ஏனோ என்மனம் மயங்குதே முருகா
ஞானோதயம் தருவாய் ஞானவேல் முருகா
மானோடு விளையாடும் மங்கை மணாளனே
வானோர் தலைவனாம் வாசவன் மருகனே
பந்த பாசத்திலே பற்றுவைத்த என்
சிந்தனை யாவுமே செல்வம் சேர்ப்பதிலே
எந்த நேரமும் சுந்தரனே உன்னை
வந்தனை செய்யவே வரம் அருள்வாயே