அருள்மிகு தணிகை வேலன்
தாமதம் ஏனைய்யா தணிகை வேலவனே
தினமும் உனைப் பணியும் ஏழை எனக்கிரங்க
பாமாலை சூட்டி பணிந்திடும் அடியவர்க்கு
சத்குருவாய் வந்த குகனே எனக்கருள
வினையுடன் பகையும் தணித்திடும் தணிகையில் தினைப்புனம் காத்திடும் திருவளர் செல்வியாம்
சுந்தர வள்ளியை மணந்திடும் முருகனே
கந்தனே கடம்பனே கருணை பொழியவே