அருள்மிகு திருத்தணி முருகன்:
குலதெய்வமே குமரா குருநாதனே உன்னை
வலம்வந்து தொழுதேனே வரம் தருவாயே
வலமும் இடமும் வள்ளியும் குஞ்சரியும்
மலருடனே நிற்க மகிழ்வுடன் காட்சிதரும்
ஜலந்தரனை அழித்த ஜடாதரன் மைந்தனே
உலகநாயகியின் உத்தம குமாரனே
தலமதில் அழகான தணிகை மீதமர்ந்து
கலங்கிடும் பக்தரைக் காத்திடும் சுந்தரனே