அருள்மிகு திருத்தணி முருகன்:
தருணம் வரவில்லையோ தாமதமும் ஏனோ
திருத்தணி மலையமர்ந்த திருமுருகா இன்னும்
கருமுகில் வண்ணன் மருகனே முருகா
குருவுருவாய் வந்து திருவருள் புரியவே
அருணகிரிக்காகவே அருணை அடைந்தாயே
குருபரன் குறைதீர்க்க கடலோரம் நின்றாயே
அருந்தமிழ் அவ்வையுடன் அளாவிடச் சென்றாயே
குருமணியே சுந்தரா கருணை காட்டவே