அருள்மிகு நல்லூர் கந்தசுவாமி:
கோடி கதிரவன் கூடினாற்போலவே
காட்சி அளித்திடும் கந்தனே அருள்வாயே
நாடி வந்துனை நயந்திடும் அடியவர்க்கு
நல்லருள் புரிந்திடும் நல்லூர் கந்தனே
குஞ்சிதபாதனுக்கு குருவாய் ஆனவனே
அஞ்சுகம் ஏந்திய அன்னையின் மைந்தனே
குஞ்சரி பாகனே குமரனே குகனே
மஞ்சுளவல்லியின் மனங்கவர் சுந்தரனே