அருள்மிகு பழனியாண்டவர்
தவம் என்ன செய்தேனோ தோழி
சிவசக்தி மைந்தன்என் சிந்தையில் நின்றிடவே
பவபயம் போக்கிடும் பழனியாண்டவனை
ஆவினன்குடி வாழும் சுந்தரனை நினைக்க
பழவினை நீக்கிடும் பால குமாரனாம்
கழலினை பணிந்திட காத்தருள்பவனாம்
கண்டபிணி தீர்த்திடும் சித்தனாதனாம்
தண்டபாணி என் புத்தியில் உறைந்திட