அருள்மிகு பழமுதிர்ச்சோலை முருகன்
அழகரின் அருகமர்ந்த அழகனே முருகா
பழமுதிர்சோலையிலே பரவிநின்ற முருகா
தொழுதிடவே உன்னை தேடிவந்தோம் முருகா
தூய்மையுடன் காவடி ஏந்திவந்தோம் முருகா
நூபுர கங்கையிலே குளித்து வந்தோம் முருகா
பாவங்களை போக்கிடவே பாடி வந்தோம் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சிதரும் முருகா
வேண்டிடும் வரமருள்வாய் சுந்தரனே முருகா