அருள்மிகு முருகன், திருத்தணி:
வடிவேல் முருகனே வாசவன் மருகனே
அடிமலர் பணிந்தேனே அருள்புரிவாயே
முடிமேல் கங்கையும் மதியும் சூடிய
அடிமுடி அறியா அண்ணலின் மைந்தனே
படிபூசை புரியவே புத்தாண்டு தோறும்
துடிப்புடன் வந்தேனே
தணிகை வேலவனே
கொடியிடை வள்ளி குஞ்சரி மணாளனே
கடிமலர் சூடிய கந்தனே சுந்தரனே