அருள்மிகு முருகன், திருப்பரங்குன்றம்:
பாராமுகம் ஏனைய்யா பரங்குன்றவாசனே
ஓராறு முகத்தினிலே ஒருமுகம் பார்க்காதோ
ஊரார் சொல்கேட்டு ஓடோடி வந்தேனே
ஆராவமுதனே அடிமலர் பணிந்தேனே
தீராத வினையாவும் தீர்ந்திடும் என்றாரே
சேராத செல்வமெலாம் சேர்ந்திடும் என்றாரே
சூராதியரை வென்ற சுந்தர வடிவேலா
நாராயணன் மருகா நல்லருள் புரிவாயே