அருள்மிகு முருகன், திருப்பரங்குன்றம்:
குமரனை காணவே குன்றம் வாருங்கள்
நமக்கருள் புரியவே அமர்ந்திருக்கும் அழகன்
சமரம் புரிந்து சூரனை வென்று
அமரர் தலைவனின் குமரியை மணந்த
விமலன் விழியிலே வந்த சுந்தரனாம்
இமயவள் கரத்திலே இணைந்த பாலனாம்
கமலக்கண்ணனின் கண்கவர் மருகனாம்
கமலவன் மைந்தன் குஞ்சரி உடனுறை