அருள்மிகு முருகன்:
முருகனை நினை மனமே தினமே
கருணையே வடிவான கதிர்வேல் கந்தனை
ஒருதரம் குகனையே ஒருமுகமாய் நினைக்க
அரும்பிணி யாவுமே அருகினில் வாராதே
அருள்தரும் அரன்மகனை அனுதினம் நினைத்தாலே
திருமகள் கலைமகள் தேடிவந்தருள்வாரே
தருமமும் தானமும் தான் செய்த பலனையே
தருவானே சுந்தரன் திருவடி நினைக்கவே