அருள்மிகு முருகன்:
இன்னும் என்ன செய்வதோ ஈசன் திருமகனே
உன்னருளைப் பெறவே உன்னைப் பணிவதன்றி
பன்னிரு ராசியிலே பக்தர் சிக்கி தவிக்கையிலே
பன்னிரு விழியிருந்தும் பாராதிருப்பதென்ன
முன்னம் செய்த வினை விலக முருகா என்றேனே
சன்னதி வந்துன்னை சேவித்து நின்றேனே
இன்னமும் தாமதமேன் ஈராறு கரத்தோனே
இன்னருள் புரிவாயே ஈடில்லா சுந்தரனே