அருள்மிகு முருகன்
தரிசனம் செய்தால் போதுமே முருகன்
பரிவுடனே நம் துயர் துடைப்பானே
அரிதிரு மருகனாம் குஞ்சரி பாகனை
வனக்குறமகளுடன் வலம் வரும் சுந்தரனை
பங்குனி உத்திரத்தில் பரங்குன்ற வாசனையும்
கந்தசஷ்டியிலே செந்தில் நாதனையும்
தைப்பூசத் திருநாளில் தண்டபாணியையும்
ஆடி கிருத்திகையில் தணிகை வேலனையும்