அருள்மிகு வடிவேலன்:
விரைந்து நீ வருவாயே சுந்தர வடிவேலா
கரைந்துனை அழைத்தேனே கலியுக வரதனே
திரை கடலோடியே திரவியம் தேடியே
நரை விழும் வரையிலே நானுனை மறந்தேனே
வரைமுறை இன்றியே வாழ்ந்து வந்தேனே
நுரைகடல் வண்ணன் நாரணன் மருகனே
அரைமதி சூடிய அண்ணலின் மைந்தனே
திரையினை நீக்கியே திருவருள் புரிவாயே