அருள்மிகு வயலூர் முருகன்:
மூவிரண்டு முகத்தானை முத்துக்குமாரனை
கூவி அழைத்தாலே குருவாய் வருவானே
காவிரிக் கரையமர்ந்த வயலூர் முருகனை
சேவித்து நின்றாலே செல்வமெல்லாம் தருவானே
மூவிழி முதல்வன் மைந்தனை தூமலர்
தூவியே தொழுதாலே துணையாக நிற்பானே
ஆவினன்குடி வாழும் அழகு சுந்தரனை
நாவினால் பாடினால் நல்லருள் புரிவானே