அருள்மிகு வள்ளிமலை முருகன்:
வள்ளி குறமகளை வாரணம் துரத்தவே
அள்ளி அணைத்திட்ட ஆறுமுகனே அருள்வாய்
துள்ளி வரும் வேலாலே துன்பங்களை போக்கும்
வள்ளிமலை முருகா வானவர் படைத்தலைவா
கள்ளமில்லாமலே கருத்துடன் நாளுமே
உள்ளம் உருகியே உன்னடி தொழுதாலே
வெள்ளமென செல்வமும் வேண்டிடும் வரமுமே
வள்ளலே தருவாயே வடிவேல் சுந்தரனே