அருள்மிகு விசாகன்:
விசாக நன்னாளிலே விண்ணவரை காக்க
விசுவநாதன் கண்மணியாய் வந்த சுந்தரனே
விசாலாட்சி கரத்தாலே வீரவேல் பெற்றவனே
வீரபாகு துணையோடு சூரனை வேன்றவனே
மலரவன் அறியாத மந்திரம் சொன்னவனே
மலர்மகள் மருகனே மலைதனைப் பிளந்தவனே
மலர்முகம் காணவே மலையேறி வந்துனது
மலர்ப்பதம் பணிந்தேனே மனமகிழ்ந்தருள்வாயே