அருள்மிகு வெற்றி வடிவேலன்
வண்ணமயில் ஏறி வரும் வெற்றி வடிவேலனே
பண்ணிசைத்து பாடிடுவோம் பாங்குடன் அருள்வாயே
கண்ணிரண்டால் உந்தனையே கண்டுதினம் தொழுதோமே
மண்ணினிலே மாண்புடனே வாழ்ந்திட செய்வாயே
மரகதவண்ணனின் சுந்தர மருகனே
மாணிக்கவல்லியின் மனமகிழ் மைந்தனே
செம்பவளவண்ணனின் செல்வமுத்து குமரனே
வைரமணி பூண்டவனே வரமருள வருவாயே