அருள்மிகு வேலன்:
பாரினிலே கண்டதில்லை யாரிடமும் கேட்டதில்லை
வாரித்தரும் வள்ளலான வேலனைப்போல் வேறொருவர்
மாரிதரும் நீர் போலே மக்கள் மனம் குளிர
கோரிடும் வரமெல்லாம் கொடுத்து மகிழ்வானே
பரமனின் மைந்தனாம் பார்வதி பாலனாம்
சுரர்களை காத்திடவே சூரனை வென்றவனாம்
சரவணபவ குகனை சண்முகசுந்தரனை
சரண்புகுந்தாலே சகலமும் தருவானே