அருள்மிகு வேலன்:
சூராதி சூரனே சுந்தரா கண் பாராய்
வீராதி வீரனே வேலனே நீ வாராய்
பாராதிருப்பதேனோ பதமலர் பணிந்துமே
வாராதிருப்பதேனோ வண்ணமயில் இருந்துமே
கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய்
பண்ணிசை பாவலர் பாடியே புகழ்ந்தாரே
மண்ணளந்தான் மருகனே மனமிரங்கிடுவாயே
வேண்டிடும் வரங்களையே வேலனே தருவாயே