ஸ்ரீ குருநாதஸ்வாமி
குருநாதனே என் குலதெய்வமே
குமரகுரு போற்றும் குமரேசனே
செந்தூர் தனில் மேவும் செங்கல்வராயனே
சீரலைவாயினில் சிங்காரவேலனே
ஆலால சுந்தரன் அழகுத் திருமகனே
அம்பிகை பாலனே அழகர் மருகனே
சூரனை வென்ற வள்ளி மணாளனே
அருணகிரிக்கருளிய அன்பருக்கு அன்பனே