குருநாதனே என் குலதெய்வமேகுமரகுரு போற்றும் குமரேசனே செந்தூர் தனில் மேவும் செங்கல்வராயனேசீரலைவாயினில் சிங்காரவேலனே ஆலால சுந்தரன் அழகுத் திருமகனேஅம்பிகை பாலனே அழகர் மருகனேசூரனை வென்ற வள்ளி மணாளனேஅருணகிரிக்கருளிய அன்பருக்கு அன்பனே
நினைவெல்லாம் நீதானே நீலமயில் வாகனனேஉனையன்றி எனக்கருள எவருண்டு உலகிலே வினை நீங்க வேலுண்டு வரம் தர நீயுண்டுகனவிலும் உனை மறவேன் கார்த்திகை பாலனே பாலோடும் பழமோடும் காவடி ஏந்தி நின்பால்முகம் காணவே பழனிக்கு வந்தேனேபாதி மதி சூடும் சுந்தரன் மைந்தனேபாமர நேசனே பரிவுடன் அருள்வாயே
வில் ஒன்று சொல் ஒன்று இல் ஒன்று என்றவனேகல்யாண ராமனே காத்தருள் புரிவாயே நல்லோர் நினைவிலே நாளும் இருப்பவனேஎல்லோர்க்கும் எளியவனே ஏரியை காத்தவனே பரசுராமர் கர்வம் பங்கம் செய்தவனேபரதனுக்கிரங்கியே பாதுகை தந்தவனேமரகத வண்ணனே மனங்கவர் சுந்தரனேமரங்கள் ஏழினையே சரத்தாலே துளைத்தவனே
கடல் வண்ணா உந்தன் கழல் பணிந்தேனேகருணைக்கடல் நீயேகாத்தருள் புரிவாயே படம் எடுத்தாடிய பாம்பின் தலைமீதுநடனம் புரிந்தவனே நந்த குமாரனே பரிதனை பிளந்த பாலகோபாலனேகரிதனை வீழ்த்தியே கஞ்சனை அழித்தவனேகிரிதனை ஏந்தியே கோகுலம் காத்தவனேசரிநிகர் இல்லாத சுந்தர குமாரனே
குன்றுதோறாடும் குமரனின் பெயரை
அன்றாடம் சொன்னாலே அற்புதம் நிகழுமே
அந்தியூரில் அருள்புரியும் எங்கள் குருநாதனே
காமாட்சி வரதனுடன் காட்சி தந்தருள்பவனே
ஆதிஅருணாசலத்தில் அருணகிரிக்கருளியவா
ஓதிஉன்னை அழைத்தேனே ஓடிவந்தருள்வாயே
காவடிகள் ஏந்தி வந்து கண்டிகதிர்வேலனவன்
சேவடிகள் தொழுதாலே செல்வமெல்லாம் தருவானே
சிக்கல் சிங்காரனே சிவசக்தி வேலவனே
எக்கணமும் மறவாத ஏழை எனக்கருள்வாயே
அத்திமுகன் தம்பியே ஆதிசக்தி மைந்தனே
இகபர சுகமருளும் ஈராறு கரத்தோனே