சதுரகிரி சுந்தர மகாலிங்கமே உன்னைசரணடைந்தேனே சதாசிவ சங்கரனே மதுர மொழிபேசும் மலைமகள் நாதனேமாமலையில் வாழும் சித்தர்கள் தலைவனே ஆடி அமாவாசையிலே அண்ணலே உனைக்காணகூடியே பக்தியுடன் குன்றேறியே வந்துபாடிப் பணிந்தோமே பரம தயாளனேநாடிய வரம்யாவும் நல்கிடுவாயே
கண்ணப்பன் கடைத்தேற கண்லீலை புரிந்தவனேகண்ணுதற் கடவுளே கடைக்கண் பாரய்யா அண்டசராசரம் அனைத்தையும் காக்கவேகண்டத்திலே விடத்தை கட்டிய சுந்தரனே விண்ணவரை மீட்டு வீணரை வீழ்த்தவேகண்ணின்று கனலாக கந்தனை தந்தவனேபண்ணும் பரதமும் படைத்த பரமனேஎண்ணமெல்லாம் நீயே ஏழைப் பங்காளனே
பார்வதி நாயகனே பரமேஸ்வரனேவார்சடை வள்ளலை வரமருள்வாயே பார்த்தனுக்கிரங்கி பாசுபதம் அளித்துபார்புகழ் ராமனின் பெயரினை புகழ்ந்தகார்வண்ணன் அயனும் காணுதற்கரியதாய்கார்த்திகை முழு நிலவில் கனலாய் நின்றவனேதாரமர்கொன்றை சூடிய சுந்தரனேபாரினில் உயிர்க்கெலாம் படி அளப்பவனே
விருத்தகிரி அமர்ந்த உருத்திரனே உந்தன்திருவடி பணிந்தேனே திருவருள் புரிவாயே திருமுறை போற்றும் அருமறை நாயகனேதருநிழல் கீழமர்ந்த தென்முக கடவுளே புரிசடை புனல்சூடி புன்னகை புரிந்தேதிரிபுரம் எரிசெய்த விரிசடை விமலனேபரிவுடனே சுந்தர மூர்த்திக்கு பொன்தந்தவரிபுலி தோலுடனே கரியுரி தரித்தவனே
அநாதியானவனே ஆலவாய் அண்ணலேஅநாதரட்சகனே அருள் புரிவாயே பிநாகம் ஏந்திய பரம தயாளனேசநாதனம் நிலைக்க சாத்திரம் தந்தவனே செங்கண் மாலுக்கு சுதர்சன சக்கரமும்பார்த்தன் தவம்கண்டு பாசுபதமும் தந்துஇன்னிசை பொழிந்த இலங்கை வேந்தனுக்குசந்திரஹாஸ வாள் தந்த சுந்தரனே
பஞ்சபூத நாயகனே பூமிநாதனே உன்னைதஞ்சமடைந்தேனே கஞ்சி ஏகம்பனே நஞ்சணிகண்டனே நாகமணிந்தவனேசஞ்சலம் போக்கிடும் சதாசிவ சுந்தரனே ஆடும் அம்பலத்தே ஆகாயமானவனேகாளத்தி தனிலே காற்றாக காட்சி தந்துஅண்ணாமலையினிலே அக்னியாய் நின்றவனேஆனைக்காவினிலே ஆழிநீராய் ஆனவனே
கங்கை தலை சூடி வைகை கரை வந்தமங்கை பாகனே மனம் இரங்கிடுவாயே சங்கை ஏந்திய மங்கை மார்பனின்தங்கை கரம் பிடித்த சோம சுந்தரனே சங்கை அரிந்துண்ட நக்கீரர்க்கருளியஅங்கையில் அனல்ஏந்தி ஆடும் அண்ணலேமங்கையர்க்கரசி பணிசெய்து பரவியகங்கையில் மலர்ந்த கந்தனை தந்தவனே
கல்லாலின் கீழமர்ந்த கலைகளின் நாயகனேசொல்லாலே பாமாலை சூட்டிடுவோம் சுந்தரனே தொல்காப்பியம் தனில் தொடங்கிய தமிழுக்குதலைச்சங்க தலைவனாய் அமர்ந்த பெருமானே சனகாதி முனிவருக்கு சின்முத்திரை காட்டிமௌன குருவாக மறைகளை தந்தவனேகுருவாரத்தில் உன்னை கும்பிட்டு வருபவர்க்குதிறமைகளை தந்திடும் தென்முகக்கடவுளே
கிழவி வந்திக்கு கூலியாளாய் வந்தஅழகிய ஆலவாய் அண்ணலே அருள்வாய் கிழவிக்கு பழம் தந்து தமிழினை சுவைத்தபழனிமலை பாலனைப் பயந்த பரமனே கிழவனாய் வந்து சுந்தரமூர்த்தியின்வழக்கினை முடித்த வார்சடையோனேஉழவாரப்பணி செய்த அப்பருக்கருளியஅழல் வண்ணா உன் கழல் பணிந்தேனே
ஆதிஅந்தமிலா அருட்பெருஞ்ஜோதியேஆதிசிவ பெருமானே அருள் புரிவாயே ஆதிரை நாளிலே ஆனந்த நடம் புரியும்ஆதிஅருணாசலம் அமர்ந்த சுந்தரனே ஆதி பராசக்தியின் ஆடித்தபசினிலேஆதி மூலமே என்ற ஆனைக்கருளியஆதிசேஷன் மீது அறிதுயில் புரியும்ஆதிகேசவன் அங்கம் பாதியாய் நின்றவனே