மான்மழு சூலமும் மத்தமும் ஏந்திடும்வான்மதி சூடிய விமலனே அருள்வாய் மீன்கொடி பறக்கும் மதுரை நகரினிலேமீன்விழி மங்கையை மணந்த சுந்தரனே நான்முகன் நாரணன் நாடியும் காணாதநான்மறை புகழும் நாதனே நிமலனேநான்மாடக்கூடல் நாயகனே சிவனேநான் உ்னைப் பணிந்தேனே நஞ்சணிகண்டனே
அம்மையுடன் சேர்ந்து ஆனந்த நடம்புரியும்உம்மையே தொழுதேனே உமைநாயகனே இம்மையும் மறுமையும் இன்பம் தந்திடும்செம்மை நிறமுடைய சோமசுந்தரனே அம்மையார்க்கிரங்கி ஆனிமுழுநிலவில்அம்மையார் படைத்த அமுதினை ஏற்றுஅம்மையே என்றழைத்து அருட்காட்சி தந்தஅம்மையப்பனே ஆதரித்தருள்வாயே
பொற்பதம் கண்டேனே பொன்னம்பலத்தானேநற்கதி அருள்வாயே நான்மறை நாயகனே அற்புதம் புரியும் ஆனந்த கூத்தனேசிற்சபேசனே சிவனே சிவகாமி நேசனே விற்போர் புரிந்த விஜயனுக்கருளவேமற்போர் புரிந்து மகிழ்வுடன் தழுவிசொற்போர் புரிந்த சுந்தரர்க்கருளியகற்போர் ஏத்தும் கபாலி நாதனே
அருணாசல சிவனே அருவுருவானவனேஅருள் புரிவாயே கருணை கடலே அருமறை போற்றிடும் உருத்திர பசுபதியேஅருந்தமிழ் இசைகேட்டு உருகிடும் சுந்தரனே திருக்காழிப் பிள்ளையும் திருவாமூர் அப்பரும்திருநாவலூரரும் திருவாதவூரரும்திருமூலரும் தந்த திருமுறை பாடிஉன்திருவுளம் மகிழவே திருவடி பணிந்தேனே
மான்விழி மங்கையுடன் மாமலை மீதுறைமான் மழு ஏந்திய மகாதேவனே சரணம் மான்மகள் வள்ளியின் மனங்கவர் முருகனைவானவரைக் காக்க வழங்கிய வள்ளலே மீன்விழி மாதுடன் மாமதுரை அமர்ந்தமீன்வலை வீசிய மீனாட்சி சுந்தரனேவான்மதி வாசுகி வார்சடை சூடியநான்மாடக்கூடலின் நாயகனே அருள்வாய்
கல்யாணசுந்தரனே கயிலைநாதனேகருணை கடலே காத்தருள்வாயே எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளிகல்யானைக்கு கரும்பூட்டி அரசனுக்கு அருளிய பக்தையின் திருமணத்தை பலரும் அறியவேசிவலிங்கம் கிணறுடனே சாட்சியாய் வந்தவனேமுறையிட்ட பக்தனுக்கு முறைமாமனாய் வந்துவழக்காடி அருள் செய்த வாதவூர் பெருமானே
ஆவணிமூலத்திலே ஆடல் பலபுரிந்தஆலால சுந்தரனே அருள் புரிவாயே காவலன் நிதியாலே கோவிலைக் கட்டியமணிவாசகருக்கருள மரத்தடியில் அமர்ந்த நரிதனை பரியாக்கி பரிதனைநரியாக்கிவாதவூரரைக் காக்க வைகை நீர் பெருக்கிவந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண்சுமந்துபிரம்படியும் பட்ட பெருந்துறை பெருமானே
ஆடியபாதத்தை அம்பலத்தே காணவேநாடியே வந்தேனே நல்லருள் புரிவாயே ஆடி அமாவாசையிலே அப்பருக்கு காட்சி தந்தஐயாறப்பனே ஆலாலசுந்தரனே தாயன்புடனே தயைபுரிகின்றநாயகன் நீயே நஞ்சணிகண்டனேநாயன்மார்களும் நான்மறையும் புகழும்நாயகனே தில்லை நடன சபாபதியே
மதியுடன் நதியும் மலரும் தலைசூடிசதிபாதியாய் நின்ற சங்கரனே அருள்வாய் சதிமனம் நோகவே சதிசெய்த மாமனின்மதியினை சரிசெய்த மகேசனே சுந்தரனே ரதிமனம் மகிழவே பதியினை தந்தவனேவிதியினை மாற்றிய வீரட்டேஸ்வரனேஉதிக்கும் கதிரவன் நிறம் உடையானேஎதிலும் எங்கும் நிறைந்திருப்பவனே
சோம சுந்தரனே சொக்கநாதனேகூடல் மதுரையிலே ஆடல் பலபுரிந்த சாமகானமுடன் அனுதினம் உனைத்துதித்தபாணன் புகழ்பரவ விறகுதனை சுமந்த நரிபரி மாற்றம் செய்து பிட்டுக்கு மண்சுமந்துவலைவீசி மீன்பிடித்து வளையல்களை விற்ற ஆலவாய் நகர்காட்டி ஆனைக்கு கரும்பூட்டிபாண்டியன் சுரம்தீர்த்து சங்கப்பலகை தந்த வேதியன் தருமிக்கு பொற்கிழிதனையருளிஆனை பசுவுடனே நாகத்தையும் வதைத்த நாரை குருவியுடன் பன்றிக்கு அருள்தந்துமாணிக்கமும் விற்று இரசவாதம் செய்த வேதப்பொருள் உரைத்து சித்திக்கும் சித்தராகிவையம் செழித்திடவே வைகை நதி தந்த