கோடி கதிரவன் கூடினாற்போலவேகாட்சி அளித்திடும் கந்தனே அருள்வாயே நாடி வந்துனை நயந்திடும் அடியவர்க்குநல்லருள் புரிந்திடும் நல்லூர் கந்தனே குஞ்சிதபாதனுக்கு குருவாய் ஆனவனேஅஞ்சுகம் ஏந்திய அன்னையின் மைந்தனேகுஞ்சரி பாகனே குமரனே குகனேமஞ்சுளவல்லியின் மனங்கவர் சுந்தரனே
வண்ணமயில் ஏறியே வையகம் வலம்வந்தஅண்ணலே ஆறுமுகா அருள்புரிவாயே உண்ணாது உறங்காது ஊதிமலை ஏறிஉனைகண்ணாரக் கண்டேனே கந்தனே சுந்தரனே கண்ணிமை மூடாத கந்தனை கண்டாலேபண்ணிய பாவமும் பறந்தோடிப் போகுமேபுண்ணியம்சேருமே புகழ்வந்து கூடுமேஎண்ணியதெல்லாமே ஈடேறும் தன்னாலே
அந்தி நிறத்தோனே ஆறுமுக வேலவனேஇந்திரன் மருமகனே இருபதம் பணிந்தேனே சந்திரன் சூடிடும் சங்கரன் மகிழவேமந்திரப் பொருள் உரைத்த முருகனே குகனே விந்திய மலையினை அடக்கிய அகத்தியர்க்குமுந்தி தமிழ் தந்த கந்தனே சுந்தரனேகுந்தியின் மைந்தரை காத்தவன் மருகனேவந்தித்தேன் உன்னை வரமருள்வாயே
மயிலம் மீதுறையும் முருகனே வேலனேமயிலேறியே வந்து மனங்கனிந்தருள்வாயே மயிலாக மாறவே சூரனுக்கருள்செய்தமயிலிறகு சூடும் மாயவன் மருகனே வஞ்சகரை வீழ்த்தி வானவரை காத்துகுஞ்சரி கரம்பிடித்த குமரனே குகனேசஞ்சலம் தீர்த்திடும் சண்முகசுந்தரனேநெஞ்சமெல்லாம் நீயே தஞ்சமளிப்பாயே
கேட்கவும் வேண்டுமோ கந்தனே உன்னிடம்கருணை புரி என்று உருகி உனை நினைத்து கேட்காமலே தரும் வள்ளலும் நீயென்றேபாட்டெழுதி வைத்தாரே பண்டிதரும் அன்றே முருகா என்றே ஒருமுறை அழைத்தாலேஇருகரம் கூப்பியே திருவடி பணிந்தாலேகுருவாகவே வந்து அருள்புரிவாய் என்றஅருணகிரிக்கருளிய ஆறுமுக சுந்தரனே
உனையே நினைந்து உருகிடும் எனையேநினைவில் கொள்வாயே நீலகண்டன் மைந்தனே அணை மடை திறந்த ஆற்று வெள்ளம் போலேஅருளைத் தந்திடும் ஆறுமுக வேலவனே அகத்திய முனிவருக்கு அருந்தமிழும் தந்துகுமரகுரு தாசருக்கு உபதேசமும் செய்துகச்சியப்பரும் உனது காவியம் பாடவும்கனிந்தருள் புரிந்த கந்தனே சுந்தரனே
ஏனோ என்மனம் மயங்குதே முருகாஞானோதயம் தருவாய் ஞானவேல் முருகா மானோடு விளையாடும் மங்கை மணாளனேவானோர் தலைவனாம் வாசவன் மருகனே பந்த பாசத்திலே பற்றுவைத்த என்சிந்தனை யாவுமே செல்வம் சேர்ப்பதிலேஎந்த நேரமும் சுந்தரனே உன்னைவந்தனை செய்யவே வரம் அருள்வாயே
இளகிய மனமுடைய குளஞ்சியப்பனேஉளமாரப் பணிந்தேனே உன்னருள் வேண்டியே அளவிலா பெம்மானை ஆரூரர் பாடவேகளவுசெய் வேடனாய் வந்தருள் புரிந்தவனே அருணகிரி குமரகுரு அவ்வைக்கு அருளியதைஅறிவேனே ஆறுமுகா அறுபடை அமர்ந்தவனேகுஞ்சரிவள்ளியுடன் கொஞ்சிடும் சுந்தரனேதஞ்சமடைந்தேனே தயை புரிவாயே
மங்கையொரு பாகனுடன் மலைமீதமர்ந்தசங்கரன் மைந்தனே செங்கோட்டு வேலவனே மங்கை உறை மார்பன் மருகனே குகனேசங்கத்தமிழ் தந்த சண்முகசுந்தரனே விந்தை பலபுரிந்து வீணரை வீழ்த்தியேசிந்தை கவர்ந்தவனே சிங்கார வேலனேஎந்தையும் தாயுமாய் எனைக் காத்தருளும்கந்தையனே கடம்பா கார்த்திகை பாலனே
கந்தகோட்டத்துறை கந்தவேளே எனக்குதந்தையும் நீயே தாயும் நீயே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியன்தந்திட்ட சுந்தரனே தயை புரிவாயே அருட்பா வள்ளலும் அடியவரும் போற்றும்திருப்போரூர் உறை திருமால் மருகனேமுத்திக்கு வித்தான முத்துக்குமாரனேஅத்திமுகன் தம்பியே ஆறுமுகவேலவனே