அருள்மிகு அண்ணாமலையார், திருவண்ணாமலை.
உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையே
கண்ணார கண்டுனை கைதொழுதேனே
கண்ணனும் அயனும் காணா ஜோதியே
விண்ணவர் போற்றிடும் விமலனே அருள்வாய்
மண்ணுயிர்க்கெல்லாம் உணவினை அளித்து
கண்ணின் மணியென காத்தருள்புரிபவனே
வண்டார்குழலி விரும்பிடும் சுந்தரனே
பண்ணிசைத்து உந்தன் பதம் பணிந்தேனே