அருள்மிகு அம்மையப்பன்:
அம்மையுடன் சேர்ந்து ஆனந்த நடம்புரியும்
உம்மையே தொழுதேனே உமைநாயகனே
இம்மையும் மறுமையும் இன்பம் தந்திடும்
செம்மை நிறமுடைய சோமசுந்தரனே
அம்மையார்க்கிரங்கி ஆனிமுழுநிலவில்
அம்மையார் படைத்த அமுதினை ஏற்று
அம்மையே என்றழைத்து அருட்காட்சி தந்த
அம்மையப்பனே ஆதரித்தருள்வாயே