அருள்மிகு அருணாசல சிவன்:
அடியவர்க்கு அடியனாய் அருள்புரிபவனே
அடிமுடி அறியா அருணாசல சிவனே
அடிநோக நடந்தாயே வந்திக்கருளவே
அடிநோக நடந்தாயே ஆரூர் தோழனுக்கே
அடித்தானே பாண்டியன் முதுகிலே பிரம்பாலே
அடித்தானே அர்ச்சுனன் காண்டீப வில்லாலே
அடித்தானே சாக்கியன் அனுதினம் கல்லாலே
அடியெலாம் ஆடலென்று அறிவேனே சுந்தரனே