அருள்மிகு அவிநாசியப்பன்:
குளிர்மதி தலைசூடி குளிர்பனி மலைமீது
களிநடனம் புரியும் கூத்தனே அருள்வாயே
குளிர்மதி முகத்தாலே கருணைமழை பொழியும்
கிளிகரம் ஏந்திய கயல்விழி நாயகனே
அவிர்பாகம் மறுத்த தட்சன் தலைகொய்த
அவிநாசி அப்பனே ஆலால சுந்தரனே
புவியிலே உனைப்போலே புரவலரும் உண்டோ
தவித்திடும் எந்தனுக்கு தயைபுரிவாயே