அருள்மிகு ஆடியபாதம்:
ஆடியபாதத்தை அம்பலத்தே காணவே
நாடியே வந்தேனே நல்லருள் புரிவாயே
ஆடி அமாவாசையிலே அப்பருக்கு காட்சி தந்த
ஐயாறப்பனே ஆலாலசுந்தரனே
தாயன்புடனே தயைபுரிகின்ற
நாயகன் நீயே நஞ்சணிகண்டனே
நாயன்மார்களும் நான்மறையும் புகழும்
நாயகனே தில்லை நடன சபாபதியே