அருள்மிகு ஆலவாய் அண்ணல்:
ஆவணிமூலத்திலே ஆடல் பலபுரிந்த
ஆலால சுந்தரனே அருள் புரிவாயே
காவலன் நிதியாலே கோவிலைக் கட்டிய
மணிவாசகருக்கருள மரத்தடியில் அமர்ந்த
நரிதனை பரியாக்கி பரிதனைநரியாக்கி
வாதவூரரைக் காக்க வைகை நீர் பெருக்கி
வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படியும் பட்ட பெருந்துறை பெருமானே