அருள்மிகு ஆலவாய் அண்ணல்:
அநாதியானவனே ஆலவாய் அண்ணலே
அநாதரட்சகனே அருள் புரிவாயே
பிநாகம் ஏந்திய பரம தயாளனே
சநாதனம் நிலைக்க சாத்திரம் தந்தவனே
செங்கண் மாலுக்கு சுதர்சன சக்கரமும்
பார்த்தன் தவம்கண்டு பாசுபதமும் தந்து
இன்னிசை பொழிந்த இலங்கை வேந்தனுக்கு
சந்திரஹாஸ வாள் தந்த சுந்தரனே