அருள்மிகு இராமநாதசுவாமி, இராமேஸ்வரம்:
வங்கக் கடல் நடுவே வைதேகி அருள் செய்த
லிங்கத்தை தரிசிக்க தீவினை நீங்கிடுமே
வங்கக் கடல்கடைந்த இராமனும் பூசித்த
தங்கநிறத்தோனே தாண்டவராயனே
திங்கள் தலைசூடி தீம்புனலும் தாங்கி
அங்கம் சரிபாதி அம்மைக்கு அருளிய
சங்கரனே உன்னை சரண் புகுந்தோமே
எங்களுக்கருள்வாயே எழில்மிகு சுந்தரனே