அருள்மிகு கபாலீஸ்வரர்
மயிலைலே மேவும் கயிலை நாதனே
கை கூப்பித் தொழுதோமே கருணை புரிவாயே
பயிரெல்லாம் செழிக்க பாரினில் அறம் தழைக்க
உயிரெல்லாம் காத்திடவே உற்ற மருந்தருள்வாயே
கற்பகவல்லியின் காதல் மணாளனே
வாயிலார் மனக்கோயில் வழிபடு சுந்தரனே
பூம்பாவைக் கருளிய பிள்ளையின் தலைவனே
பங்குனியில் விழா காணும் கபாலிநாதனே