அருள்மிகு கல்யாண சுந்தரன்:
கல்யாணசுந்தரனே கயிலைநாதனே
கருணை கடலே காத்தருள்வாயே
எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளி
கல்யானைக்கு கரும்பூட்டி அரசனுக்கு அருளிய
பக்தையின் திருமணத்தை பலரும் அறியவே
சிவலிங்கம் கிணறுடனே சாட்சியாய் வந்தவனே
முறையிட்ட பக்தனுக்கு முறைமாமனாய் வந்து
வழக்காடி அருள் செய்த வாதவூர் பெருமானே